அன்பிற்குரிய நண்பர்களுக்கு,
வணக்கம்.
நான்
சில மாதங்களாக சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் உள்ள நெடுநல்வாடை என்ற பாடலைப் படித்து,
அந்தப் பாடலுக்கான உரையை https://nedunalvaadai2021.blogspot.com என்ற வலைத்தளத்தில் இப்பொழுது பதிவு
செய்துள்ளேன்.
வாடைக்
காற்று வீசும் குளிர் காலத்தில் ஒரு மன்னன் போருக்குப் போயிருக்கிறான். அவன் மனைவி அவனைவிட்டுப் பிரிந்து வருத்தத்தில்
இருக்கிறாள். வருத்தத்தில் இருப்பதால் அவளுக்கு வாடைக் காலம் நீண்டதாகவும், போரில்
வெற்றிபெற்றுக்கொண்டிருப்பதால் அந்த வாடைக் காலம் அந்த மன்னனுக்கு நல்லதாகவும் உள்ளது.
இவ்வாறு நெடியதாகவும் அதே சமயத்தில் நல்லதாகவும் இருக்கும் வாடைக் காலத்தில் நடைபெறும்
நிகழ்வுகளை கவிதை நயத்தோடும், விளக்கமாகவும் சங்க காலப் புலவர் நக்கீரனார் நெடுநல்வாடை
என்று ஒரு பாடலாக இயற்றியுள்ளார்.
இந்தப்
பாடலைப் புரிந்துகொள்வது சற்று கடினம். என்னால் இயன்றவரை, இந்தப் பாடலின் பொருளைப்
புரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் பாடலுக்கு அறிமுகம், பாடலின் அருஞ்சொற்களுக்குப் பொருள்,
பதவுரை, கருத்துரை மற்றும் தொகுப்புரை (பொருட்சுருக்கம்) ஆகியவற்றைப் பதிவுசெய்துள்ளேன்.
ஓரளவுக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிமுகத்தைப் படியுங்கள். அதிக ஆர்வம் உள்ளவர்கள் தொகுப்புரையையும்
படியுங்கள். சங்க இலக்கியத்தில் தீவிர ஆர்வமுள்ளவர்கள் பாடல், அருஞ்சொற்களுக்குப் பொருள்,
கருத்துரை ஆகிய அனைத்தையும் படியுங்கள். உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்; நண்பர்களோடு
அவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றி.
அன்புடன்,
பிரபாகரன்.
பி.கு.
நெடுநல்வாடையில் அதிக விருப்பமுள்ளவர்கள் விரும்பினால், குவியம் (zoom) வழியாக நாம்
அனைவரும் அதைச் சேர்ந்து படிக்கலாம். அவ்வாறு படிப்பதற்கு, ஒவ்வொரு முறையும் ஒரு மணி
நேர அளவில் நாம் ஐந்து அல்லது ஆறுமுறை நாம் கூட வேண்டியதாக இருக்கும். ஆர்வமுள்ளவர்கள்
prabu0111@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக என்னை
அல்லது kolandavel@gmail.com என்ற மின்னஞ்சல் ழியாக நண்பர்
கொழந்தவேல் இராமசாமி அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.
This comment has been removed by the author.
ReplyDelete